பப்பாளி மில்க் கீர்

Loading...

பப்பாளி மில்க் கீர்
தேவையானவை:
பப்பாளிபழத் துண்டுகள் (தோல் சீவவும்) – ஒரு கப், பால் – 2 கப், சர்க்கரை – கால் கப், சீவிய முந்திரி – பாதாம் – 2 டீஸ்பூன்.


செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி… சர்க்கரை சேர்த்துக் கலந்து, பால் ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, சூடான பாலில் கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பப்பாளி – பால் கலவையை சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதனுடன் சீவிய முந்திரி – பாதாம் சேர்க்கவும். இதை சூடாகவோ, ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply