பனீர் ஹார்ட்

Loading...

பனீர் ஹார்ட்
தேவையானவை:
துருவிய பனீர் – ஒரு கப், சேமியா – கால் கப், மிளகுத்தூள், துருவிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலைப் பொடி – கால் கப், வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய மாங்காய் – தலா ஒன்று, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
சேமியாவை வறுத்துக் கொள்ளவும். துருவிய பனீர், துருவிய மாங்காய், இஞ்சி, கொத்தமல்லி, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள், பச்சை மிளகாய், வறுத்த சேமியா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். இதனுடன் வேர்க்கடலைப் பொடியை சேர்க்கவும். இதய வடிவில் தட்டிக் கொள்ளவும். இதனை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸ் அல்லது கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறவும். குட்டீஸ்களை கவர்ந்திழுக்கும் ஸ்நாக் இது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply