பனீர் – வெஜ் குருமா

Loading...

பனீர் - வெஜ் குருமா
தேவையானவை:
பனீர் – ஒரு கப் (சதுரமாக வெட்டியது), காலிஃப்ளவர் – கால் கப், பீன்ஸ் – 10, கேரட் – 3, பச்சைப் பட்டாணி – கால் கப், பேபி கார்ன் – 2 (நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (அரைக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகள் கலவை, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய்கறி வெந்தவுடன் பால், பனீர், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 3 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply