பனீர் ரோல்ஸ்

Loading...

பனீர் ரோல்ஸ்
தேவையானவை:
வேக வைத்த உருளைக்கிழங்கு – 3, துருவிய பனீர் – ஒரு கப், பிரெட் ஸ்லைஸ் – 4, நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், அம்சூர் பவுடர், இஞ்சித் துருவல், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்களை சிறு சிறு துண்டுகளாக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் பிரெட் துண்டுகள், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சித் துருவல், அம்சூர் பவுடர், துருவிய பனீர் ஆகியவற்றை சேர்க்கவும். இதிலிருந்து சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டவும். நடுவில் கேரட் துருவலை வைத்து மூடி, விரல் நீளத்தில் உருட்டிக் கொள்ளவும். இதேபோல் எல்லாவற்றையும் உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும். குறுக்காக வெட்டி சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply