பனீர் பொடிமாஸ்

Loading...

பனீர் பொடிமாஸ்

தேவையானவை:
பனீர் – 200 கிராம், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3, பூண்டு – 2 பல், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
பனீரை உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும். பிறகு, உதிர்த்து வைத்துள்ள பனீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply