பனீர் – பீட்ருட் ஸ்வீட் ரைஸ்

Loading...

பனீர் - பீட்ருட் ஸ்வீட் ரைஸ்

தேவையானவை:
சாதம், துருவிய பனீர் – தலா ஒரு கப், சர்க்கரை – கால் கப், பீட்ரூட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), நெய் – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 4, கிராம்பு – 2, பட்டை – சிறிய துண்டு, முந்திரி, பாதாம், திராட்சை – தேவையான அளவு.செய்முறை:
வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, துருவிய பீட்ரூட், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இறுகி வரும்போது சாதம், பனீர் சேர்த்துக் கிளறி… வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply