பனீர் கோஃப்தா கிரேவி

Loading...

பனீர் கோஃப்தா கிரேவி
தேவையானவை:
– கோஃப்தா செய்வதற்கு: பனீர் (துருவியது) – ஒரு கப், ஸ்வீட் இல்லாத கோவா – கால் கப் (அல்லது) வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒன்று, பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

கிரேவி செய்ய:
சீரகம், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி (விழுதாக அரைத்தது) – 2, வெங்காயம் (விழுதாக அரைத்தது) – ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பட்டை – சிறிய துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
துருவிய பனீர், கோவா (அ) வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடித்த முந்திரி, சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகள் செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால், கோஃப்தா ரெடி.
கடாயில் வெண்ணெயை சூடாக்கி… சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், கொத்தமல்லி தூவி இறக்கவும். பரிமாறும் முன் கோஃப்தாக்களை போட்டு பரிமாறவும்.
சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply