பனீர் கோஃப்தா கடி

Loading...

பனீர் கோஃப்தா கடி
தேவையானவை:

– கோஃப்தா செய்வதற்கு: பனீர் (துருவியது) – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஓமம் – கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

கடி செய்வதற்கு:

மோர் – ஒரு கப், கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


தாளிக்க:

வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய் வற்றல் – 3, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

மோருடன் உப்பு, கடலை மாவு, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, கடாயில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்தால் ‘கடி’ தயார். கோஃப்தா செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்து சிறு உருண்டைகள் செய்து, மெதுவாக கொதிக்கும் கடியில் போடவும். 5 நிமிடம் வேகமாக கொதிக்கவிட்டு, பின் மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் நீர் சேர்க்கவும்). தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடாயில் தாளித்து இதனுடன் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

கோஃப்தா உடைந்துவிடும் என நினைத்தால், ஆவியில் 8 நிமிடம் வேகவைத்து பின் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply