பனீர் – குடமிளகாய் ஃப்ரை

Loading...

பனீர் - குடமிளகாய் ஃப்ரை
தேவையானவை:
பனீர் – 200 கிராம், குடமிளகாய் – 2, தக்காளி – ஒன்று, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நசுக்கவும்), காய்ந்த வெந்தயக் கீரை – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
குடமிளகாய், தக்காளி, பனீரை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி… பூண்டு, இஞ்சித் துருவல் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய குடமிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி… உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும், பனீர் துண்டுகள், காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply