பனீர் ஃப்ரூட் சாலட்

Loading...

பனீர் ஃப்ரூட் சாலட்
தேவையானவை:
பனீர் – 250 கிராம், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை – தலா 15, மாம்பழம் – ஒன்று, பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா ஒரு டீஸ்பூன், வறுத்த எள் – 2 டீஸ்பூன், தேன் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி… அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் கலந்து, இந்தக் கலவையை 15 நிமிடம் ஊற வைக்கவும். பழங்களைக் கழுவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பழத் துண்டுகள், ஊற வைத்த பனீர் துண்டுகள், பாதாம், பிஸ்தா, முந்திரி அனைத்தும் சேர்த்துக் கலக்கவும். இதன் மீது, தேன் ஊற்றி, வறுத்த எள்ளை தூவி பரிமாறவும். இதில் அன்னாசி, பப்பாளி, ஆப்பிள் பழத் துண்டுகளும் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply