பனாரஸ் அல்வா

Loading...

பனாரஸ் அல்வா
தேவையானவை:
பால் – ஒரு கப், பூசணிக்காய் துண்டுகள் (தோல் நீக்கியது) – ஒரு கப், சர்க்கரை – 2 கப், நெய் – கால் கப், பாதாம் – முந்திரி துண்டுகள் – 2 டீஸ்பூன், சர்க்கரை இல்லாத கோவா – அரை கப்.


செய்முறை:
பூசணிக்காயில் பால் விட்டு, குக்கரில் வேக வைத்து, ஆறியதும் அரைத்து எடுக்கவும். அடிகனமான கடாயில் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சேர்ந்தாற்போல வரும் சமயம் கோவாவை உதிர்த்துப் போட்டுக் கிளறவும். இறுகி வரும்போது அடி பிடிக்காதவாறு நெய் விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் கீழே இறக்கவும். கடாயில் கொஞ்சம் நெய் விட்டு… பாதாம், முந்திரி துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்துக் கலக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply