பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா? இத ஃபேஸ் பேக்குகளை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க….!

Loading...

பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமாபால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
பாலில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.


வாழைப்பழ மாஸ்க்

ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும ஆரோக்கியமும் மேம்படும்.


பப்பாளி மற்றும் தேன் பேக்

பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, முகத்தை கழுவ, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பேக்

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து, அரைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமைகள் அகலும்.


ஆரஞ்சு தோல் மற்றும் சந்தனப் பொடி

ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கி, முகம் பளிச்சென்று மின்னும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply