பட்டாணி பிரியாணி | Tamil Serial Today Org

பட்டாணி பிரியாணி

Loading...

பட்டாணி பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, தயிர் – 3 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:
இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2.


செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், பச்சைப் பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN