பஞ்சாபி ராஜ்மா

Loading...

பஞ்சாபி ராஜ்மா
தேவையானவை:

ராஜ்மா 150 கிராம்
ரைஸ் பிரான் ஆயில் 150 மிலி
பிரியாணி இலை 2
மீடியம் சைஸ் வெங்காயம் 2 (நறுக்கிக்கொள்ளவும்)
நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
பூண்டுப்பல் 8 (நறுக்கிக்கொள்ளவும்)
மிளகாய்ப் பொடி 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி 3
உப்பு தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை:

குக்கரில் ராஜ்மாவை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். ஆயிலை சூடுபடுத்தி இதில் பிரியாணி இலை , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து மீண்டும் வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். இதில் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும்.
இதில் ராஜ்மா, ஆயில் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, அடுப்பைக் குறைத்து வைத்து 15 நிமிடம் வரை வேக விடவும். பின், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் மீண்டும் வேக விடவும். கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply