நெல்லூர் மசாலா ரைஸ்

Loading...

நெல்லூர் மசாலா ரைஸ்

தேவையானவை:
அரிசி – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
எள் – 2 டீஸ்பூன், தனியா – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), லவங்கம் – ஒன்று.


செய்முறை:
அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி… உப்பு, மஞ்சள்தூள் மற்றும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். இந்த மசாலாவுடன் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால்… நெல்லூர் மசாலா ரைஸ் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply