நீள்வட்ட முகத்திற்கான மேக்கப் டிப்ஸ்

Loading...

நீள்வட்ட முகத்திற்கான மேக்கப் டிப்ஸ்பெண்கள் என்­றாலே ‘டக்’கென்று மனதில் தோன்­று­வது – அழகு! அழ­கென்­றாலே பெண்­க­ளுக்கு ‘சட்’டென்று நினை­விற்கு வரு­வது – மேக்கப்! எந்த வய­திலும் இந்த மேக்கப் இல்­லாமல் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண்­களைப் பார்ப்­பது அரிது.

பெண்கள் தங்­களை அழ­கு­ப­டுத்திக் கொள்­வதும் ஒரு கலை தான்.

அதிலும் தங்கள் முகத்தில் உள்ள ஒவ்­வொரு பாகத்­தையும் பார்த்துப் பார்த்து மெரு­கேற்றிக் கொள்­வதில் பெண்­களை மிஞ்­சவே முடி­யாது.

இவர்­களில், நீள்­வட்ட வடிவில் முகம் உள்ள பெண்ணா நீங்கள்? உங்­க­ளுக்­கென்றும் தனி­யான சில அழகுக் குறிப்­புகள் உள்­ளன. இவற்றை நீங்கள் கடைப்­பி­டித்தால் உங்கள் அழகு மேலும் மெரு­கேறும்.


இதோ உங்கள் நீள்­வட்ட முகத்­திற்­கான சில அழகுக் குறிப்­புகள்… பவுண்சேடன் :

ஒவ்­வொரு முக வடி­விற்கும் தனித்­த­னி­யான பவுண்­டேஷன் என்று கிடை­யாது.

அப்­படி யாரும் சொன்னால் நீங்கள் நம்பி விடா­தீர்கள்.

உங்­க­ளுக்குப் பிடித்த, இயற்­கை­யான வழியில் அமைந்த பவுண்­டே­ஷனை சரி­யாகத் தேர்ந்­தெ­டுத்து அப்ளை செய்து கொள்­ளுங்கள்.

உங்கள் முகம் பொலி­வாக இருக்கும்.


அழ­கான உத­டுகள்:

உங்கள் உத­டு­களைப் பற்­றியோ, உத­டு­களில் நீங்கள் போட்டுக் கொள்ளும் லிப்ஸ்­டிக்கைப் பற்­றியோ யாரா­வது தவ­றாக விமர்­சனம் செய்­கி­றார்­களா? அதை உடனே சரி செய்து கொள்­ளுங்கள்.

உங்­க­ளுக்கு நீள்­வட்ட முக­மாக இருப்­பதால் அடர்த்­தி­யான ஷேடோக்கள், கவர்ந்­தி­ழுக்கும் பள­ப­ளப்­பான உதட்டுச் சாயங்கள் உங்­க­ளுக்கு எடுப்­பாக இருக்கும்.


கண்களை எடுப்­பாகக் காட்­டு­வ­தற்கு:

கண்­களில் செய்யும் மேக்­கப்பை சிம்­பி­ளாக்கிக் கொள்­ளுங்கள்.

கவர்ந்­தி­ழுக்கும் கண்கள் நீள்­வட்ட முக வடிவம் கொண்ட உங்­க­ளுக்கு கண்கள் பெரிய பிளஸ்­ஸாக இருக்கும்.

க்ரீமி ஷேடோக்கள் மற்றும் அடர்த்­தி­யான லேஷ்­களைக் கொண்டு உங்கள் கண்­களை அழ­கு­ப­டுத்திக் கொண்டால் கலக்­க­லாக இருக்கும்.

கண்­களின் அழகை அதி­க­ரித்துக் காட்ட வேண்­டு­மென்றால், உதட்டுச் சாயங்­களைக் கணி­ச­மாகக் குறைத்துக் கொள்­ளுங்கள். ஒரே நேரத்தில் உதடு மற்றும் கண்­களை அழ­கு­ப­டுத்திக் கொள்ள வேண்டாம்!


மிரு­து­வான கன்­னங்கள்:

உங்கள் கன்­னங்­களின் ஜொலிப்பு நீங்கள் எவ்­வ­ளவு புரோன்­ஸரை உப­யோ­கிக்­கி­றீர்கள் என்­பதில் தான் இருக்­கி­றது.

உங்கள் நீள்­வட்ட முகத்­திற்கு, குறை­வான புரோன்­ஸ­ரையே கன்­னங்­களில் பயன்­ப­டுத்த வேண்டும்.

அதிக புரோன்­ஸர்கள் உங்கள் முக அழகைக் குறைத்து விடும். ஷேடோக்­களின் ஜாலம் உங்கள் முகங்­களில் உள்ள பாகங்­க­ளுக்கு ஒரே வித­மான ஷேடோக்­களைப் பயன்­ப­டுத்தக் கூடாது.

உதா­ர­ணத்­திற்கு, நீங்கள் கன்­னங்­க­ளுக்கு லைட்­டான புரோன்­ஸரைப் பயன்­ப­டுத்தும் போது, கண்­க­ளுக்­கான ஹைலைட்­டரை அடர்த்­தி­யாக்கிக் கொள்­ளுங்கள்.

பிளஷ் செய்யும் மாயம் நீள்­வட்ட முகத்­தி­ன­ருக்கு மட்­டு­மல்ல, இது எல்­லோ­ருக்கும் பொருந்தும். மைல்ட் பவள நிற மற்றும் லைட் பிங்க் நிற பிளஷ் பவு­ட­ரை­ஜென்ட்­டி­லாக உங்கள் முகத்தில் அப்ளை செய்து பாருங்கள். உங்கள் மேக்கப் அப்­போது தான் முழு­மை­ய­டையும்.


லிப் க்ளாஸ்:

லிப் க்ளாஸ் பயன்­ப­டுத்­து­வதால் உங்கள் நீள்­வட்ட முகத்­துக்கே ஒரு தனி அழகு கிடைத்து விடும்.

மாலை நேரப் பார்ட்டிகளுக்குச் செல்லும் போது, கண்களில் மேக்கப்பை அதிகப்படுத்திக் கொண்டு, மெல்லிய பளபளப்புடன் உங்கள் உதடுகளில் லிப் க்ளாஸ் போட்டுக் கொள்ளுங்கள்;

பார்ட்டியே உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கும்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply