நித்யகல்யாணி மலரின் மகத்துவம்!

Loading...

நித்யகல்யாணி மலரின் மகத்துவம்!“மாசுவரே என்றும் மலக்கடலில் வீழ்ந்துலகோர் ஆசுவரே என்ன அலைவேளை ஆளாயேல் கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரிந்தடியார் ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே’’ என்றும் இளமையுடன் வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் இருக்கமுடியாது. ஆனால் இயற்கையின் அமைப்பில் சாதாரண மனிதர்களால் அவ்வாறு வாழ முடியாது. ஆனால் அனைத்து பருவ காலங்களிலும் இளமையுடன் வாழும் ஒரு மூலிகை நித்தயகல்யாணி என்று அழைக்கப்படுகிறது. பெரிவீன்க்கில், மதுக்கரை என்ற பெயராலும் அழைக்கப்படும் நித்யகல்யாணி புற்று நோய்க்கு அரு மருந்தாக விளங்குகிறது. மாற்றடுக்கில் அமைந்த இலைகள் கொண்ட குறுஞ்செடி. ஐந்து இதழ்களை கொண்ட இளம்சிவப்பு மற்றும் வெள்ளை பூக்களை கொண்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தானாகவே வளர்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்றுமதிக்காக மூலிகை பயிராகவும் வளர்க்கப்படுகிறது. கல்லறைகளில் வளர்க்கப்பட்டதால் கல்லறை பூ எனவும் இதனை அழைக்கின்றனர். மிகுந்த கசப்பு தன்மை கொண்டதால் ஆடு மாடுகள் இதை உண்பதில்லை. இதன் பிறப்பிடம் மடகாஸ்கர். இந்தோனேசியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், உள்ளிட்ட மாநிலங்களில் விளைகிறது. இதிலுள்ள 100 ஆல்கலாய்டுகளும் மருந்தாகவே பயன்படுகிறது. இதில் உள்ள வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்று நோயை குணப்படுத்தும். அரை லிட்டர் நீரில் 5 அல்லது 6 பூக்களை போட்டு கால் லிட்டராக சுண்ட வைத்து வடிகட்டி 4 வேளை குடித்து வந்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசியுடையவர்கள் பூக்களின் குடிநீரை 50 மிலி அளவில் குடித்துவந்தால் அதிக பசிமறைந்து போதுமான அளவிற்கு பசி ஏற்படும். வேனில் கட்டி எனப்படும் கோடைக்கால கட்டிகளை கரைப்பதற்கு நித்யகல்யாணி செடியின் இலையை அரைத்து பற்று போட்டால் வேனில் கட்டிகள் உடைந்து ஆறும். வேர் சூரத்தை ஒரு சிட்டிகை வெந்நீரில் கலந்து இரண்டு வேளை உட்கொண்டால் சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும்.ரத்த அணுக்கள் குறைபாடுயுடையவர்கள் இதன் குடிநீரை அளவாக 3 மாதம் குடித்து வந்தால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் குறைபாடு நீங்கும். மனநோய்களை குணமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதன் பூக்களை பறித்து தினந்தோறும் முகர்ந்து, இதன் குடிநீரை 30 மிலி அளவில் நீண்ட நாட்கள் குடித்து வந்தால் மனநோய்கள் தீரும். பாடு என்றாலே துன்பம் என்று பொருள். அதுவும் பெரும்பாடு என்றால் தாங்க முடியாத துன்பம் என்று பொருள் கொள்ளலாம். பெண்களின் பெரும்பாட்டை போக்குவதற்கு இதன் துளிர் இலைகளை மைய அரைத்து பெண்களின் மாதவிலக்கின் நாட்களின் போது வெறும் வயிற்றில் சுண்டைக்காய் அளவில் விழுங்கிவந்தால் 3 மாதத்தில் பெரும்பாட்டின் வலி மற்றும் வெள்ளை போகுதல் நீங்கும்.கல்லறை பூ என்று பலராலும் ஒதுக்கப்படும் நித்தயகல்யாணியின் பயன்களை அறிந்து நமக்கு வழங்கிய முன்னோர்கள் காட்டிய வழியில் தேவையறிந்து அளவாக பயன்படுத்தி நோயின்றி வளமுடன் வாழ்வோம்.

Loading...
Rates : 0
VTST BN