நான்கு வர்ணங்களில் அறிமுகமாகும் HTC 10

Loading...

நான்கு வர்ணங்களில் அறிமுகமாகும் HTC 10கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட முன்னணி நிறுவனமான HTC ஆனது HTC 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.1 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இக் கைப்பேசியானது Carbon Gray, Glacier Silver உடன் கூடிய White Face, Glacier Silver உடன் கூடிய Black Face மற்றும் Topaz Gold ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply