நல்ல காபி வேணுமா..? வெஸ்பா கஃபே வாங்க…சூப்பரோ…சூப்பர்…

Loading...

நல்ல காபி வேணுமா.. வெஸ்பா கஃபே வாங்க…சூப்பரோ…சூப்பர்…ஃபியட் நிருவனத்தைத் தொடர்ந்து வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனமும் நாடு முழுவதும் காபி கஃபே ஷோரூம்களை திறந்து வருகிறது.

வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பியாஜியோ. பிரிமியம் ரகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டரை பிரபலப்படுத்தும் முயற்சிகளை பியாஜியோ துவங்கியுள்ளது.

இதற்காக, நாடு முழுவதும் வெஸ்பா பிராண்டு பெயரில் காபி கஃபே ஷோரூம்களை திறக்க உள்ளது. இதில், இத்தாலிய மணம் கமழும் காபி மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. அத்துடன் வெஸ்பா ஸ்கூட்டரின் பிரிமியம் அம்சங்கள் மற்றும் அழகை கண்டு ரசிக்கும் வகையில் அங்கு ஸ்கூட்டர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்ட்டரை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பையும் வெஸ்பா கஃபே ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஃபியட் கார் நிறுவனம் தனது தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கஃபே ஷோரூம்களை திறந்து வருகிறது.

இந்த வழியை பின்பற்றி வெஸ்பா நிறுவனம் கஃபே ஷோரூம்களை நாடு முழுவதும் திறக்கிறது. முதலில் டெல்லி மற்றும் புனேயில் வெஸ்பா கஃபே ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம், வெஸ்பா ஒரு பிரிமியம் பிராண்டு என்பதை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்த முடியும் என்று பியாஜியோ கருதுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply