நன்மைகள் நிறைந்த நாவல்பழம்

Loading...

நன்மைகள் நிறைந்த நாவல்பழம்பழங்கள் சாப்பிடுவது நம் அரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.
அதில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு நல்ல தீர்வாக உள்ளது.
நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.
இதில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. மேலும் சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது.

நாவல் பழத்தின் மகத்துவங்கள்


நீரிழிவு நோய்

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.
மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

மூலநோய்

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

கருப்பை பாதிப்பு

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் குணமடையும்.

சரும நோய்

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். மேலும் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.

மாரடைப்பு

நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

வயிற்றுபோக்கு

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply