நட்ஸ் பிரியாணி

Loading...

நட்ஸ் பிரியாணி
தேவையானவை:

பாசுமதி அரிசி – 250 கிராம், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி – தலா 50 கிராம், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 10 பல், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன். சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலாக்காய் – தலா 2.

ராய்தா செய்ய:

வெங்காயம் – 2, தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று, வெள்ளரிக்காய் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, தயிர் – ஒரு கப், கடுகு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். ராய்தாவுடன் பரிமாறவும்.

ராய்தா செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி, உப்பு போட்டு பிசிறி, தனியாக வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டை யும் சேர்த்து அரைக்கவும். பிசிறி வைத்த வெங்காயத்தை பிழிந்து கொள்ளவும். இதனுடன் தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், தேங்காய் – இஞ்சி விழுது சேர்த்து, எல்லாவற்றையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெ யில் கடுகு தாளித்து இதனு டன் சேர்க்கவும்.
இந்த ராய்தா, எல்லா பிரியாணிகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

Loading...
Rates : 0
VTST BN