த்ரெட்டிங் செய்த பின் பிம்பிள் வரு­கி­றதா?

Loading...

த்ரெட்டிங் செய்த பின் பிம்பிள் வரு­கி­றதாமுகத்தில் வளரும் தேவை­யற்ற முடி­களை நீக்­கு­வ­தற்கு பெண்கள் த்ரெட்டிங் செய்­வார்கள். சரு­மத்தில் வளரும் தேவை­யற்ற முடி­களை நீக்க .

வெக்சிங் இருந்­தாலும், பெரும்­பா­லான பெண்கள் த்ரெட்­டிங்கை தான் மேற்­கொள்­கி­றார்கள்.

இதற்கு காரணம் வெக்­சிங்கை விட த்ரெட்டிங் செய்­வதால் வலி சற்று குறை­வாக இருப்­பது தான். த்ரெட்டிங் புரு­வங்­களில் மட்­டு­மின்றி, உதட்­டிற்கு மேல் மற்றும் நெற்­றி­யிலும் சிலர் செய்­வார்கள்.

சில­ருக்கு த்ரெட்டிங் செய்த பின் அவ்­வி­டத்தில் பிம்பிள் வரும்.

அப்­படி பிம்பிள் வரு­வ­தற்கு முக்­கிய காரணம், சுத்­த­மில்­லாமை மற்றும் முகத்தில் அள­வுக்கு அதி­க­மாக எண்ணெய் இருப்­பது தான்.

த்ரெட்டிங் செய்த பின் பிம்பிள் வரு­வதை ஒரு­சில வழி­களின் மூலம் தடுக்­கலாம். அது என்­ன ­வென்று பார்ப்­போமா!!!

த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்­த­மாக கழுவிக் கொள்ள வேண்டும். குறிப்­பாக, சுடு­நீரைப் பயன்­ப­டுத்­து­வது நல்­லது.

ஏனெனில் சுடுநீர் சரு­மத்தில் உள்ள அதி­கப்­ப­டி­யான எண்ணெய் பசையை நீக்­கி­விடும்.

முகத்தை நீரில் கழு­வியப் பின், சுத்­த­மான ெகாட்டன் துணியால் முகத்தைத் துடைக்­காமல், ஒற்றி எடுக்க வேண்டும். ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்­கப்­ப­டக்­கூடும்.

பின் இயற்­கை­யான டோனரைக் கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும்.

அதிலும் சீமைச் சாமந்தி டீ அல்­லது கற்­றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள்.

அதன் பின் பியூட்­டி­சி­யனை த்ரெட்டிங் செய்ய அனு­ம­தி­யுங்கள்.

த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்­டியால் அவ்­வி­டத்தை ஒத்­தடம் கொடுக்க வேண்டும். இதனால் சரு­மத்­து­ளைகள் அமை­யாகி, பிம்பிள் வரு­வது தடுக்­கப்­படும்.

ஒரு­வேளை, உங்­க­ளுக்கு முகம் கழுவ வேண்­டு­மென்­பது போல் தோன்­றினால், ரோஸ் ேவாட்­டரைப் பயன்­ப­டுத்­துங்கள். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்­பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வரு­வது தடுக்­கப்­படும்

த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணி­நே­ரத்­திற்கு அவ்­வி­டத்தைத் தொடக்­கூ­டாது.

அதே போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது.

அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply