தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

Loading...

தொப்பையைக் குறைக்க வேண்டுமாதொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம்.

முதலில் தொப்பை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொப்பை விழுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உடலில் தானாக கொழுப்பு சேருதல். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காததால் ஏற்படுவது என்று பொருள். இரண்டாவது காரணம், நம் உடலுக்குள் அதிகமாக திரவங்கள் சேர்வது. இவ்விரண்டு காரணங்களைத் தவிர ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலின் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும்.

தொப்பை ஏற்பட்டால் அன்றாட பணிகளைக கூட செய்வதற்கு சிரமமாகிவிடும். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால் இதயக் கோளாறு மற்றும் பித்தப்பை கோளாறுகளையும் உருவாக்கிவிடும். ஆகவே தொப்பையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்குரிய கவனத்தை செலுத்தி அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

இதற்காக அக்குபஞ்சர் தவிர வேறு எந்த மருத்துவ சிகிச்சை முறையை அணுகினாலும் தொப்பையை குறைக்க இரண்டு விடயங்களை அவசியமாக வலியுறுத்துவார்கள். ஒன்று உணவுக் கட்டுப்பாடு மற்றொன்று உடற்பயிற்சி.
இவ்விரண்டையும் கேட்கும் போது எளிதாகவும், செயல்படுத்தும்போது கடினமாகவும் இருக்கும் என்பது நடைமுறை நிஜம்.

உணவுக் கட்டுப்பாட்டை ஓரளவிற்கு கடைபிடித்துவிட இயலும். ஆனால் தொப்பையை வைத்துக்கொண்டு குனிந்து, நிமிர்ந்து, ஓடி, குதித்து உடற்பயிற்சியை செய்யவேண்டும் என்றால்.. மிகவும் கடினமாகதாக தோன்றும்.

உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் ஆயுள் முழுமைக்கும் கடைபிடிக்கவேண்டும். அப்போது தான் அவை கட்டுக்குள் இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக இடைநிறுத்தம் செய்தால் மீண்டும் தொப்பை வந்துவிட வாய்ப்பு உண்டு. அதனால் அதற்கு முன் செய்த உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி வீணாகிவிடவும் வாய்ப்பு உண்டு.
ஆனால் தொப்பைக்கு அக்குபஞ்சர் சிறந்த நிவாரணத்தையும் உடனடி பலனையும் தருகிறது. கல்லீரலோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகள் காதில் உள்ளன. இந்த அக்குப்புள்ளிகளைத் துõண்டுவதன் மூலம் கல்லீரலின் பணியை மேம்படுத்தி, உடலில் தங்கிவிட்ட அதிகப்படியான கொழுப்பை எரிக்க செய்ய இயலும். மேலும் ஜீரண மண்டல உறுப்புகளோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகளும் காதிலேயே இருக்கின்றன.
அதனையும் தேவையான அளவிற்கு துõண்டிக்கொண்டிருந்தால், வயிற்றிற்குள் தேவைõன அளவு சாப்பாடு சென்றவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். இதன் மூலம் உணவுக்கட்டுப்பாட்டை நம்மை அறியாமலேயே கடைபிடிக்க முடியும்.

அதனைத் தொடர்ந்து அக்குபஞ்சர் மருத்துவத்தில் இதற்கென விசேடமாக தயாரிக்கப்படும் மூலிகை கலந்த எண்ணெய்யை வயிற்றின் மேற்பகுதியில் தடவிக்கொள்ளவேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள தோலின் தன்மையில் மாற்றம் ஏற்படும்.

ஏனெனில் ’ஓஸ்மாஸிஸ்‘ எனப்படும் அறிவியல் கோட்பாட்டின் படி உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான திரவம், தோலில் உள்ள சிறு துவாரங்கள் வழியாக வெளியேறிவிடும்,

இப்படி மூன்று வழிகளில் நீங்கள் முயற்சி எடுத்தால் தொப்பையை எளிதாக குறைக்க முடியும்.

பதினைந்து நாள்கள் வரை தினமும் இரண்டு முறையாக, முப்பது நிமிடங்கள் வரை இத்தகைய சிகிச்சைகளை செய்து கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். அதாவது தொப்பைக்கு எளிய முறையில் குட்பை சொல்லலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply