தொடர்ச்சியான பயணத்தில் புதிய உலக சாதனை படைத்த கார்

Loading...

தொடர்ச்சியான பயணத்தில் புதிய உலக சாதனை படைத்த கார்எதிர்காலத்தில் இலத்திரனியல் கார்கள் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனினும் எரிபொருளில் இயங்கும் கார்களும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் Hyundai ix35 எனும் கார் ஆனது ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக 9,810 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து உலக சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இக் காரானது எரிபொருளை நிரப்புவதற்காக மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக 6 நாட்கள் பயணித்துள்ளது.

மேலம் ஒரு முறை தாங்கி முழுவதுமாக நிரப்பப்பட்ட ஹைட்ரஜனுடன் 643 கிலோ மீற்றர்கள் வரை பயணித்துள்ளது.

இதற்கிடையில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு 8 பஸ்களை 112,6540 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு லண்டனின் பிரபல்யமான பாதைகளின் ஊடாக பயணிக்க செய்து மற்றுமொரு சாதனையையும் நிலைநாட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply