தேன் குழல்

Loading...

தேன் குழல்
தேவையானவை:
பச்சரிசி – 6 கப், வெள்ளை உளுந்து – ஒரு கப், எள் (அ) சீரகம் – 10 கிராம், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெள்ளை உளுந்தை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து பச்சரிசியுடன் கலந்து மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அந்த மாவில் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்தால்… தேன் குழல் ரெடி மிக்ஸ் தயார்.
தேன்குழல் தேவையானபோது ரெடி மிக்ஸ் மாவில் சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, மாவை அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். வெந்ததும் திருப்பிவிடவும். சிறிது நேரத்துக்குப் பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply