தேங்காய் சட்னி

Loading...

தேங்காய் சட்னி
தேவையானவை:

தேங்காய் துருவல் – ஒரு கப், பொட்டுகடலை – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் (காய வைத்தது) – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வெறும் கடாயில் தேங்காய் துருவலை போட்டு, தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். பொட்டுக்கடலை, காய்ந்த பச்சை மிளகாயை மிக்ஸியில் பொடிக்கவும். வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஈரம் போக வறுத்து எடுத்து, தேங்காய் கலவை யில் சேர்த்துக் கலந்தால்… தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் தயார்!
எவ்வளவு தேங்காய் சட்னி தேவையோ… அந்த அளவுக்கு கலவையை எடுத்து, தண்ணீர் விட்டு கலந்து உபயோகப்படுத்தவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply