தூத் பேடா

Loading...

தூத் பேடா
தேவையானவை:
பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 150 கிராம், பாதாம் – பிஸ்தா துண்டுகள், சோள மாவு – தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:
சோள மாவை சிறிதளவு பால் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டுக் காய்ச்சவும். பால் குறுகி வரும்போது (சேறு போன்ற பதம்) சோள மாவு கரைசலை சேர்க்கவும். பிறகு, தீயைக் குறைத்து… சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து இறுகி வரும்போது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு அடிபிடிக்காது கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் இறக்கி… பாதாம் – பிஸ்தா துண்டுகள் சேர்த்துக் கலந்து வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். கையில் நெய் தடவிக்கொண்டு கலவையிலிருந்து சிறிது எடுத்து விருப்பமான வடிவம் கொடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply