தினமும் உணவில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்ப்பதால் உடலினுள் ஏற்படும் நிகழ்வுகள்

Loading...

தினமும் உணவில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்ப்பதால் உடலினுள் ஏற்படும் நிகழ்வுகள்பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் உண்ணும் உணவில் சேர்த்து வரும் ஓர் மசாலாப் பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சளை மசாலாப் பொருட்களின் ராணி என்றே அழைக்கலாம். மஞ்சள் உணவிற்கு நிறத்தை மட்டும் வழங்குவதில்லை.
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதனை நம் முன்னோர் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆய்வுகளிலும் மஞ்சள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவி புரியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், உடலை சுத்தம் செய்யும் பண்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை ஏராளமாக இருப்பது தான். இப்போது இந்த மஞ்சள் தூளை உணவில் தினமும் 1 டீஸ்பூன் தவறாமல் சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்கள்

புற்றுநோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த பொருள் மஞ்சளில் உள்ளது. எனவே மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

செரிமானம் மேம்படும்

தினமும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால் செரிமான செயல்பாடு மேம்படும், வாய்வு தொல்லை நீங்கும், பித்தப்பை தூண்டப்படும். ஆனால் ஏற்கனவே பித்தப்பை நோய்களைக் கொண்டவர்கள் மஞ்சளை தினமும் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அப்படி சேர்த்தால் பித்தநீர் அதிகம் சுரக்கப்பட்டு பிரச்சனைகள் அதிகரிக்கும்.

நாள்பட்ட அழற்சிகளை எதிர்க்கும்

உடலினுள் உள்ள நாள்பட்ட அழற்சிகள் தான் தற்போது பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த நோயெதிர்ப்பு அழற்சி பொருள், உடலினுள் உள்ள அழற்சிகளை முற்றிலும் நீக்கும். எனவே மஞ்சளை தினமும் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

மூளை பாதுகாக்கப்படும்

ஆராய்ச்சியின் படி, மஞ்சளில் உள்ள குர்குமின், BDNF என்னும் ஒரு வகையான வளர்ச்சி ஹார்மோன் அளவை அதிகரிக்கும். இந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதால் தான் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. மேலும் மஞ்சளை தினமும் சேர்ப்பதன் மூலம் முதுமையில் ஏற்படும் பல மூளை சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.

ஆரோக்கியமான இதயம்

மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும், இரத்தம் உறைவது தடுக்கப்படும், தமனிகளின் சுவர்களில் படிந்துள்ள கொழுப்பு படிகங்கள் சுத்தமாகும். இதனால் இதய பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

மூட்டு வலிகள்

முன்பே சொன்னது போல், மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளது. இதனால் இது மூட்டுக்களில் ஏற்பட்டுள்ள அழற்சிகளை தடுத்து, நாள்பட்ட மூட்டு வலிகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு மூட்டு பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

முதுமையைத் தடுக்கும்

இளமையிலேயே முதுமை தோற்றத்தைப் பெறுவதை மஞ்சள் தடுக்கும். இதற்கு மஞ்சளில் உள்ள குர்குமின் தான் காரணம். எனவே நீங்கள் நீண்ட நாள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

வாழ்நாள் அதிகரிக்கும்

தற்போது பல மக்களின் உயிரைப் பறிக்கும் இதயம் பிரச்சனைகள், புற்றுநோய் பிரச்சனைகளை மஞ்சள் தடுப்பதால், வாழும் நாட்கள் அதிகரிக்கும். எனவே முடிந்த வரையில் இதனை நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் சேர்த்து வாருங்கள்.

குறிப்பு

முக்கியமாக நம் உடல் குர்குமினை அவ்வளவு எளிதில் உறிஞ்சாது. எனவே உடலில் குர்குமின் அதிகமாக உறிஞ்சப்படுவதற்கு, சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எளிதில் குர்குமின் உடலால் உறிஞ்சப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply