தமிழக அரசு ஃபேஸ்புக்கிற்கு தடை விதித்துள்ளது!

Loading...

தமிழக அரசு ஃபேஸ்புக்கிற்கு தடை விதித்துள்ளது!அரசு அலுவல வளாகங்களில் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் புள்ளி விவரங்களாக‌ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்கள் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதுடன், உலகமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களையும் பயன்படுத்தி நான்கு சுவர்களுக்கு மத்தியில் உலகத்தையே கொண்டு வரும் விந்தையையும் செய்து வருகின்றனர். கம்ப்யூட்டரிலுள்ள இணையதளங்களை பயன்படுத்தி தலைவர்களுக்கு மிரட்டல் விடுப்பது, புதிய திரைப்படங்களை சிடி போட்டு விற்பது உட்பட சட்டத்துக்கு புறம்பான பல்வேறு செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.
சைபர் கிரைம் போலீசார் தவறு செய்பவர்களை கண்டுபிடித்து தண்டித்தும் வருகின்றனர்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அலுவலக நேரங்களில் ஊழியர்கள் கம்ப்யூட்டரிலுள்ள இணையதளங்கள் மூலம் பொழுது போக்குவது உட்பட பல்வேறு செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசு வேலை தாமதப்படுவதுடன், அரசின் செலவினமும் அதிகரித்து வந்தது.

ஓடிசா மாநில தலைமைச்செயலகத்தில் உள்ள துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கம்ப்யூட்டரில் பேஸ் புக், டிவிட்டர், யூ-டியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தி வந்தனர். இந்த வகை இணையதளங்களை பார்வையிடவும், பயன்படுத்தவும் அம்மாநில அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் பார்வைக்கும் ஓடிசா மாநில அரசின் தடை உத்தரவு தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக பிரவுசிங் சென்டர்களில் சிறுவர்களை கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களிலும் பேஸ் புக், டிவிட்டர், யூ-டியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தவும் தடைவிதிப்பது குறித்தும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பொதுமக்களும் இதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply