தசைகள் வலிக்கிறதா? தினமும் முட்டை குழம்பு சாப்பிடுங்கள்

Loading...

தசைகள் வலிக்கிறதா தினமும் முட்டை குழம்பு சாப்பிடுங்கள்வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் முட்டையில் உண்டு.

மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.

உடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.

தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.


முட்டை குழம்பு

முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வேக வைத்து முட்டையை போடவும்.

குழம்பு கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முட்டையை அவித்து சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றால் இவ்வாறு குழம்பு செய்து அன்றாடம் சாப்பிடுங்கள்.

இதனால், உடலில் ஆங்காங்கே ஏற்படும் தசைகளின் வலிக்கு தீர்வு கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply