தசைகளை உறுதிப்படுத்த

Loading...

தசைகளை உறுதிப்படுத்த
வைட்டமின் பி1:
தசைகளை உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகிக்கும் வைட்டமினாக பி1 உள்ளது. தினசரி உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்களை பயன்படுத்துவதும், சக்திக்காக ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துவதும் இந்த வைட்டமினின் பணியாகும். சூரியகாந்தி விதைகளில் பி1 வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
வைட்டமின் பி2:
ரிபோஃப்ளாவின் என்றும் அழைக்கப்படும் பி2 வைட்டமின் உடலுக்குத் தேவையான மூன்று முதன்மையான ஊட்டச்சத்துக்களாக இருக்கும் புரதங்கள், க்ராப்ஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்கவும், நொதிக்கவும் மிகவும் உதவுகின்றன. பாலில் ரிபோப்ளாவின் அதிகளவில் உள்ளது.
வைட்டமின் பி3:
மூன்றாவது பி வைட்டமினாக இருக்கும் நியாஸின் உடலின் சக்தியை உற்பத்தி செய்வதிலும், நரம்பு மண்டலத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது செரிமாணத்தை ஆரோக்கியமான முறையில் நிகழ்த்தவும் உதவி வருகிறது. கோழிக்கறியில் நியாஸின் அதிகளவில் உள்ளது.
வைட்டமின் சி:
முதுகெலும்புக்கும், உடலின் தசைகளுக்கும் இடையில் சரியான இணைப்பு திசுக்களை பராமரிக்க வைட்டமின் சி பெரிதும் உதவுகிறது. இந்த வைட்டமினில் உள்ள அதிகபட்ச ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதுகாக்கின்றன. ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ், ப்ராக்கோலி, குடைமிளகாய் மற்றும் பப்பாளி ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
போலிக் அமிலம்:
உடலில் புதிய செல்களை உருவாக்கவும், இரத்த சோகையிலிருந்து உடலை காக்கவும் போலிக் அமிலம் உதவுகிறது. ஒரு கோப்பை அவரையில் கிடைக்கும் போலிக் அமிலம் ஒரு நாள் முழுவதற்குமான அளவு 90 சதவீதத்தை நமக்கு அளித்து விடும்.
வைட்டமின் ஏ:
ரெட்டினால் என்று அழைக்கப்படும் வைட்டமின் ஏ, உடலின் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சளிச்சவ்வு நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவி உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கேரட், பசலைக் கீரை, தக்காளி, வின்டர் ஸ்குவாஷ் மற்றும் டர்னிப் ஆகியவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
வைட்டமின் டி:
‘சூரிய ஒளி வைட்டமின்’ என்று அழைக்கப்படும் வைட்டமின் D-ஐ நாம் சூரிய வெளிச்சதிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வெண்ணைய் நீக்கப்பட்ட பால், சால்மன் மீன், இறால் மற்றும் முட்டை ஆகியவற்றிலும் வைட்டமின் டி குவிந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply