தக்காளி முட்டை பொடிமாஸ்

Loading...

தக்காளி முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
முட்டை – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவுதாளிக்க

கடுகு ,கருவேப்பிலை – தேவையான அளவுசெய்முறை:

வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியவுடன் மிளகாய்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு , உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு மசாலா வாசனை போனவுடன் தக்களியை சேர்த்து வதக்கவும்.
தக்காளியை 2 நிமிடம் வதக்கி விட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றவும். தக்காளி வெங்காயம் முட்டை எல்லாம் ஓன்று சேர்த்து நன்கு கிளரவும்.
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். முட்டை உதிரியாக வந்தவுடன் இறக்கவும்
சுவையான தக்காளி முட்டை பொடிமாஸ் ரெடி ரசம் சாம்பாருக்கு பொருத்தமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply