ஜி.வி.பிரகாஷ் வாங்கிய ‘ஜாகுவார் எக்ஸ்ஜெ’ ஒரு கண்னோட்டம்…

Loading...

ஜி.வி.பிரகாஷ் வாங்கிய ‘ஜாகுவார் எக்ஸ்ஜெ’ ஒரு கண்னோட்டம்…பிஸி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் ரூ.1.40 கோடியில் புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே கார் வாங்கியுள்ளார்.

சினிமா நட்சத்திரங்களுக்கு சொகுசு கார்கள் மீது கொள்ளை பிரிமியம் வைத்துள்ளனர்.

அயராத பணிகளுக்கு இடையில் அவர்கள் அலுத்து சலுத்து ஆசுவாசப் படுத்துவதற்கு கார்கள் அதிகம் பயன்படுகின்றன.

எனவேதான், விலையை பற்றி கவலைப்படாமல் அதிக வசதிகள் கொண்ட கார்களை சினி ஸ்டார்கள் வாங்குகின்றனர்.

அந்த வகையில், தற்போது பிஸியான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் ரூ.1.40 கோடியில் புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே காரை வாங்கியுள்ளார்.

மேலும், தனது காருக்கு கையோடு டிஎன் 09 சிஏ 1 என்ற பேன்ஸி எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார்.

ஜாகுவார் கார்களுக்கே உரிய வசீகரமான வடிவமைப்பு கொண்ட இந்த கார் சாலையில் செல்லும்போது மற்ற கார்களிலிருந்து தன்னை தனித்து அடையாளம் காட்டிக் கொள்கிறது.

பகல் நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி விளக்குகளும் வசீகரத்தை கூட்டுகிறது. அலாய் வீலில் நகர்ந்து செல்லும்போது ரதத்தை நினைவூட்டுகிறது.

இந்த காரில் 8 சிலிண்டர்கள் கொண்ட 5.0 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 385 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு இசட்எப் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்த காரில் ஸ்டீயரிங் வீலில் கியர் மாற்றும் வசதியையும் கொண்டிருக்கிறது.

இருக்கைகள் மிக மிக சொகுசாக இருப்பதால் பயணத்தின் போது ஒரு இனிமையான அனுபவத்தை தரும்.

ஏர் சஸ்பென்ஷன், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, தானியங்கி ஹெட்லைட் மற்றும் வைப்பர் என வசதிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பிற சொகுசு கார்களை விட ஜாகுவார் எக்ஸ்ஜே அதிக இடவசதியை கொண்டிருக்கிறது. கலர் டிஸ்ப்ளேயுடன் கூடிய டச் ஸ்கிரீன் அனைத்து புறங்களிலும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம்.

நகர்ப்புற சாலையில் 5.8 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 10.5 கிமீ மைலேஜையும் இந்த கார் கொடுக்கும் என்று ஜாகுவார் தெரிவிக்கிறது.

மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் சொகுசு கார்களில் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட கார்களில் ஜாகுவார் எக்ஸ்ஜேவும் ஒன்று என்று கூறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply