‘ஜிஎம்’மின் புதிய ஆட்டோமேட்டிக் கேப்டிவா……..

Loading...

‘ஜிஎம்’மின் புதிய ஆட்டோமேட்டிக் கேப்டிவா……..பார்ப்பதில் அசத்தலான பிரிமியம் எஸ்யூவி என்று பெயர் வாங்கிய செவர்லே கேப்டிவாவின் ஆட்டோமேட்டிக் மாடலை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஆட்டோமேட்டிக் கேப்டிவாவில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 185 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

பயணிகளின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நவீன தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் இந்த பிரிமியம் எஸ்யூவியில் இருக்கிறது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் மேலாண் இய‌க்குனர் லோவல் பேடாக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ கேப்டிவாவின் ஸ்டைலும், ஃபெர்பார்மென்ஸ் ஆகியவை செவர்லே பிராண்டுக்கு தனி மதிப்பை ஏற்படுத்திகொடுத்துள்ளது.

இதை தக்கவைக்கும் விதமாக புதிய கேப்டிவா வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளோம். மேல்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பிரிமியம் எஸ்யூவி கண்டிப்பாக நிறைவேற்றும், என்றார்.

புதிய ஆட்டோமேட்டிக் கேப்டிவா ரூ.18.74 லட்சம் முதல் ரூ.24.59 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply