சோயா அல்வா

Loading...

சோயா அல்வா
தேவையானவை:

சோயா மாவு – ஒரு கப்
பால் – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 2 கப்
முந்திரிப்பருப்பு – 30
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை
குங்குமப்பூ – சிறிதளவு
பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் – சிறிதளவு


செய்முறை:

சோயா மாவை பாலில் கூழ் போல கெட்டியாக இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு கடாயில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கெட்டியாக பாகு இரட்டைக் கம்பிப் பதம் வைத்து, கரைத்து வைத்திருக்கும் கூழை ஊற்றிக் கிளறவும். கேசரி பவுடர் மற்றும் வாசனை சாமான்களை சேர்த்து, நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றிக் கிளறவும். அல்வா சுருண்டு வந்ததும், தட்டி கொட்டி ஆறவைத்து, முந்திரிப்பருப்பு தூவி அலங்கரிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply