சோன் பப்டி கேக்

Loading...

சோன் பப்டி கேக்
தேவையானவை:

கடலை மாவு, மைதா மாவு – தலா 1 கப்
நெய் – ஒன்றரைகப்
சர்க்கரை – 2 கப்,
க்ளுக்கோஸ் – 2 டீஸ்பூன்
பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த பாதாம் – 2 டேபிள்ஸ்பூன்
சாரைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்


செய்முறை:

கடலை மாவு, மைதா மாவு, நெய் மூன்றையும் ஒரு வாணலியில் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி வைத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கம்பிப்பதமாக வந்ததும் இறக்கவும் (ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் விடும்போது, கையில் உருட்டும் பதமாக வரவேண்டும்). இப்போது க்ளுக்கோஸை நீரில் கரைத்து, சர்க்கரைப் பாகில் விடவும். பாகு சற்று மஞ்சள் நிறமாகும். அந்தப் பாகை வெண்ணெய் தடவிய ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் விட்டு நன்கு கலக்கவும். சுருண்டு, பிரவுன் நிறத்தில் பந்து போல வரும் சர்க்கரைப் பாகை வறுத்த மாவுக் கலவையில் கொட்டிக் கிளறவும். கலவையை மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டாம். நெய் அல்லது வெண்ணெய் தடவிய தட்டை ரெடியாக வைத்துக் கொள்ளவும். இப்போது கலவையை அப்படியே எடுத்து சுத்தமான மேஜை மீது சதுர வடிவில் பரப்பவும். சூடாக இருக்கும் போதே மாவை நாலாப்புறமும் நன்கு இழுத்துவிட்டு சதுர வடிவம் வருமாறு மடிக்கவும். இதே போல ஐந்து தடவை மடிக்கவும். இனி கைகளால் மாவின் மேற்புறத்தைத் தட்டி சமப்படுத்தவும். இதன் மேலே தயாராக உள்ள முந்திரி, பாதாம், சாரைப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, கலவையை அப்படியே நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். ஆறியவுடன் வில்லைகளாக வெட்டவும். இது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply