சோயா கொழுக்கட்டை

Loading...

சோயா கொழுக்கட்டை
தேவை:

பச்சரிசிமாவு – 2 கப்

நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

சோயா உருண்டைகள் – 20

வெல்லத்துருவல் – அரை கப்

ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு


செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும்.

நீர் கொதிக்கும் போது மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறவும். மாவு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி, ஈரத்துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி சோயா உருண்டைகளை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு அதை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் அலசி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும்.

அத்துடன் சோயா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருள கிளறவும். தயாரித்த அரிசி மாவை உருண்டைகளாக்கி அதில் சோயா கலவையை வைத்து மூடவும்.

பிறகு அனைத்து கொழுக்கட்டைகளையும் இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply