செட்டிநாட்டு இறால் வறுவல் | Tamil Serial Today Org

செட்டிநாட்டு இறால் வறுவல்

Loading...

செட்டிநாட்டு இறால் வறுவல்
தேவையானப் பொருட்கள்:

இறால் – கால் கிலோ
வெங்காயம் நறுக்கியது – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய் துருவியது – கால் மூடி
காய்ந்த மிளகாய் – 10
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும் தேங்காய் துருவலை் காய்ந்த மிளகாய் சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

கடாயில் தேவையான அளவு எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும்.

அதனுடன் இறாலை போட்டு வதக்கி அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் வதக்கி அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன்

மசாலா கெட்டியாகி இறால் வெந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN