சுறா புட்டு

Loading...

சுறா புட்டு
தேவையான பொருள்கள்.

சுறா மீன் –அரை கிலோ
வெங்காயம் –கால் கிலோ
பூண்டு – 150 கிராம்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும்.
சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும்.
அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாசனை போன பிறகு மெத்தென வந்தவுடன் இறக்கி பரிமாறவும். பூண்டு அதிகம் சேர்த்து கொண்டால் சுறாமீனில் இருக்கும் வாய்வு தொல்லை நீங்கி விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply