சீழ் நிரம்பிய பருக்களை போக்கும் இயற்கை வைத்தியம்

Loading...

சீழ் நிரம்பிய பருக்களை போக்கும் இயற்கை வைத்தியம்உங்கள் முகத்தில் அடிக்­கடி வலி மிக்க மற்றும் சீழ் நிரம்­பிய முகப்­ப­ருக்கள் வரு­கி­றதா?

பெரும்­பாலும் இம்­மா­தி­ரி­யான முகப்­ப­ருக்கள் இளம் வய­தி­ன­ருக்கு தான் அதிகம் வரும். சீழ் நிரம்­பிய முகப்­ப­ருக்­க­ளா­னது வடுக்­களை ஏற்­ப­டுத்தும்.

ஆகவே, இம்­மா­தி­ரி­யான முகப்­ப­ருக்கள் வரு­வதைத் தடுக்க வேண்­டி­யது அவ­சியம். அதற்கு கடை­க­ளுக்கெல்லாம் செல்ல வேண்­டிய அவ­சியம் இல்லை.

உங்கள் வீட்டு சமை­ய­ல­றைக்கு சென்­றாலே போதும். எளிதில் இந்த சீழ் நிரம்­பி­யுள்ள முகப்­ப­ருக்களைப் போக்­கலாம். முக்­கி­ய­மாக இந்த முகப்­ப­ருக்கள் வலி­யுடன், அரிப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வதால், பலரும் இதைக் கையால் தொட்டுக்கொண்டே இருப்­பார்கள்.

இப்­படி சீழ் உள்ள பருக்­களைத் தொட்டால், அதில் உள்ள பக்­டீ­ரி­யாக்கள் நிலை­மையை மோச­மாக்­கு­வ­தோடு, பரவச் செய்யும்.

எனவே சீழ் உள்ள பருக்கள் வராமல் இருக்­கவும், அவற்றைத் தடுக்­கவும் கீழே கொடுக்­கப்­பட்­டுள்ள சில இயற்கை வழி­களைப் பின்­பற்­றுங்கள்.

இதனால் நிச்­சயம் நல்ல பலன் கிடைக்கும்.


பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா சரு­மத்தில் உள்ள அதி­கப்­ப­டி­யான எண்­ணெயை நீக்­கு­வ­தோடு, பருக்­களில் உள்ள பக்­டீ­ரி­யாக்­களை அழித்து சரு­மத்­து­ளை­களை இறுக்­கி­விடும்.

அத்­த­கைய பேக்கிங் சோடாவில் நீர் மற்றும் சிறிது வெள்­ள­ரிக்காய் சாறு சேர்த்து கலந்து, பாதிக்­கப்­பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்­படி செய்தால் விரைவில் சீழ் நிறைந்த பருக்கள் நீங்­கி­விடும்.


முட்டை வெள்­ளைக்­கரு:
முட்­டையின் வெள்­ளைக்­க­ருவில் புரோட்டீன் மட்­டு­மின்றி, அன்­டி-­வைரல் மற்றும் அன்­டி-­பக்­டீ­ரியல் தன்மை இருப்­பதால், இவை பக்­டீ­ரி­யாக்­களை எதிர்த்துப் போராடும்.

மேலும் முட்­டையின் வெள்­ளைக்­கரு சரு­மத்­து­ளை­களை சுருங்கச் செய்து, பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு முட்­டையின் வெள்­ளைக்­க­ரு­வுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்­ணெயில் உள்ள அசிட் மற்றும் அன்­டி-­வைரல், அன்­டி-­பக்­டீ­ரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்­மை­யினால், சீழ் உள்ள பருக்கள் வரு­வது குறைந்­து­விடும்.

மேலும் இதில் விற்றமின் ஈ இருப்­பதால், தேங்காய் எண்ணெய் கொண்டு பாதிக்­கப்­பட்ட பகு­தியை மசாஜ் செய்­வது நல்ல பலனைத் தரும்.


க்ரீன் டீ :
க்ரீன் டீயில் உள்ள அன்­டி-­அக்­ஸிடன்ட், சரு­மத்­தினுள் உள்ள பாதிப்­புக்­களை சரி ­செய்யும். குறிப்­பாக, அரிப்பு மிக்க பருக்­களைப் போக்கும்.

அதற்கு க்ரீன் டீயை முகத்தில் தட­வு­வ­துடன், தினமும் ஒரு கப் குடித்தும் வாருங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply