சிறுவர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் பழரசங்களில் மறைந்திருக்கும் ஆபத்து

Loading...

சிறுவர்களை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் பழரசங்களில் மறைந்திருக்கும் ஆபத்துஇனிப்பு சுவையுடைய தின்பண்டங்களை விரும்பாத சிறுவர்கள் இருக்கவே முடியாது.
இதனை காரணமாகக் கொண்டு இன்று அவர்களை இலக்காக வைத்தே பல தின்பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவ்வாறே சிறுவர்களுக்காக உற்பத்தி செய்யப்படும் பழ ரசங்களில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும், இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

லிவர்பூல் பல்கலைக்கழகம், குயீன் மேரி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 203 வரையான உற்பத்தி பொருட்களை ஆய்வு செய்த போது அவற்றில் 42 சதவீதமான உற்பத்திகளில் 19 கிராம் வரையான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர்கள் பழ ரசங்களை விடவும் பழங்களை நுகர்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply