சிகரட் துண்டுகளை பிளாஸ்டிக்காக மாற்றி சாதித்த நிறுவனம்

Loading...

சிகரட் துண்டுகளை பிளாஸ்டிக்காக மாற்றி சாதித்த நிறுவனம்அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று சிகரட் துண்டுகளை பிளாஸ்டிக்காக மாற்றி சாதித்துள்ளது.

சிகரட்டின் மீதி துண்டுகளில் காணப்படும் சேதன மற்றும் அசேதன சேர்வைகளின் சிக்கல் தன்மை காரணமாக அவற்றினை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதில் பல நிறுவனங்களும் தோல்வி கண்டிருந்தன.

ஆனால் நியூ ஜேர்சியிலுள்ள TerraCycle எனும் நிறுவனம் முதன் முறையாக சிகரட் துண்டுகளினை பிளாஸ்டிக்காக மீள்சுழற்சிக்கு உட்படுத்தி சாதித்துள்ளது.

இவ்வாறு மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட சிகரட் துண்டுகளிலிருந்து ரயில் தண்டவாளத்திற்கு தேவையான ஸ்லீப்பர்ஸ், ஆஷ்ட்ரே (Ashtray), கப்பல் படுக்கை என்பன உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்கா, ஐரோப்ப நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட 9 நாடுகளிலில் இருந்து சிகரட் துண்டுகளை கொண்ட 7,000 கூடைகளை (Bins) பெற்று இவ் ஆராய்ச்சியினை அந் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

இதற்காக பலரும் தாம் பாவித்த சிகரட் மீதிகளை இலவசமாக குறித்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply