சாப்பிட வேண்டிய பச்சைகாய்!

Loading...

சாப்பிட வேண்டிய பச்சைகாய்!பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும்.
அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.

அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.


அவரைக்காயின் மகத்துவங்கள்

அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.

அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.

அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்க, வயிற்றுப் பொருமலை குறையும்.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும்.

அறிவுத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் மூட்டு வலிக்கு அவரைக்காய் பொரியல் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்து.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN