சரும பராமரிப்புக்கு கைகொடுக்கும் கொத்தமல்லி : ஈஸி டிப்ஸ்…!

Loading...

சரும பராமரிப்புக்கு கைகொடுக்கும் கொத்தமல்லி ஈஸி டிப்ஸ்...!அன்­றாட சமை­யலில் பயன்­ப­டுத்தும் ஓர் மூலிகை தான் கொத்­த­மல்லி. இந்த கொத்­த­மல்லி உணவில் நல்ல மணத்தை கொடுப்­ப­தற்கு மட்­டு­மின்றி, இதில் பல பிரச்சி­னை­களைக் குணப்­ப­டுத்தும் ஏரா­ள­மான சத்­துக்கள் நிறைந்­துள்­ளன.

அது­மட்­டு­மின்றி, கொத்­த­மல்­லியைக் கொண்டு நம் அழ­கிற்கு கேடு விளை­விக்கும் பிரச்சி­னை­க­ளுக்கு தீர்வு காணலாம்.

இங்கு மருத்­துவ குணங்கள் கொண்ட கொத்­த­மல்­லியைக் கொண்டு சரு­மத்தில், தலையில் ஏற்­படும் பிரச்சி­னை­க­ளுக்கு எப்­படி தீர்வு காண்­பது என தெளி­வாக கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதைப் படித்து உங்கள் அழகை விலை­ம­லி­வான கொத்­த ­மல்­லியைக் கொண்டே பரா­ம­ரித்து, நன்மைப் பெறுங்கள்.


மென்­மை­யான சரு­மத்­திற்கு

உங்­க­ளுக்கு மென்­மை­யான பட்டுப் போன்ற சருமம் வேண்­டு­மெனில், 4 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்­ள­ரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்­த­மல்லி சாற்­றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


முகப்­ப­ருவைப் போக்க :

உங்­க­ளுக்கு முகப்­பரு தொல்லை இருந்தால், ஒரு கப் நீரில் கொத்­த­மல்லி, சிறிது சீமைச்­சா­மந்தி பூ அல்­லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்­கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து, வடி­கட்டி அந்த பொருட்­களை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, முகப்­பரு பிரச்சி­னையை விரைவில் போக்­கலாம்


கரும்­புள்­ளிகள்:

மூக்கைச் சுற்றி கரும்­புள்­ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்­த­மல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலு­மிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்­கப்­பட்ட பகு­தியில் தடவி 1/2 மணி­நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்­புள்­ளிகள் அகலும்.


சிவப்பு தடிப்­புக்­களைப் போக்க :

சில­ருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்­புக்கள் ஏற்­படும். இந்த பிரச்சி­னையில் இருந்து விடு­பட, 2 டீஸ்பூன் கொத்­த­மல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்­காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்­வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழு­வுங்கள்.

இதனால் நல்ல மாற்­றத்தை நீங்­களே காண்­பீர்கள்.


முடி உதிர்­த­லுக்கு :

முடி உதிர்­தலைக் கட்­டுப்­ப­டுத்த கொத்­த­மல்லி பெரிதும் உத­வி­யாக இருக்கும். மேலும் கொத்­த­மல்­லியில் உள்ள விற்ற­மின்கள் மற்றும் புரோட்­டீன்கள், முடியின் வளர்­ச்­சியைத் தூண்டும்.

எனவே கொத்­த­மல்லி சாற்­றினை எடுத்து, தலையில் நன்கு படும்­படி தடவி 1 மணி­நேரம் ஊற வைத்து, பின் தலையை வெது­வெ­துப்­பான நீரில் அலச வேண்டும்.

இப்­படி வாரம் ஒரு­முறை செய்து வந்தால், முடி உதிர்­வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்­டப்­படும்.


பிங்க் நிற உத­டு­க­ளுக்கு :

உங்கள் உதடு கறுப்­பாக, பொலி­வி­ழந்து உள்­ளதா? அப்­ப­டி­ யென்றால், இந்த வழி உங்­க­ளுக்கு உத­வி­யாக இருக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன், கொத்­த­மல்லி இலை சாற்­றினை உதட்டில் தடவிக் கொள்­ளுங்கள். இன்னும் சிறப்­பான பலனைக் காண அத்­துடன் சிறிது எலு­மிச்சை சாற்­றி­னையும் கலந்து பயன்­ப­டுத்­துங்கள்.


கொத்­த­மல்லி மாஸ்க்:

சிறிது கொத்­த­மல்லி இலைகள், தயிர் மற்றும் கற்­றாழை ஜெல்லை சரி­ச­ம­மாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply