சருமத்தைக் காக்கும் உணவுகள்

Loading...

சருமத்தைக் காக்கும் உணவுகள்நம்மைச் சோதிக்கும் நோய்கள், உடல் பாதிப்புகள் பலவற்றுக்கு நம் உணவுமுறை குறைபாடே முக்கியக் காரணமாக இருக்கிறது.

நாம் சந்திக்கும் சருமப் பிரச்சினைகளுக்கும் அதுதான் காரணம். உணவுவழி சத்துக்குறைபாடுகளுடன், சுத்தமின்மை, பரம்பரைக் காரணங்களாலும் சரும நோய்கள் ஏற்படலாம்.

தோலில் ஏற்படும் தேமல் போன்ற பிரச்சினைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

எலுமிச்சைச் சாறு, முட்டைக்கோஸ் இலை, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரைச் சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இவற்றை தோல் மீதும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக, தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், வைட்டமின் பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்சினைகள் உண்டாகின்றன.

உணவில் ரவை, சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க முழுத் தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள், காய்கள், பால் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், புரூட் சாலட், பிரெட், சப்பாத்தி, அரைக்கீரை கூட்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.

பொதுவாக காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவது நம் தோல் இளமையைக் காத்து எப்போதும் புதுப்பொலிவோடு இருக்க வைக்கும்.

மேற்கண்ட சத்தான உணவுகளோடு, வெயிலில் அலையாமல் இருப்பது, புகை, நெருப்பு போன்றவை இருக்கும் சூழலைத் தவிர்ப்பது, சுற்றுச்சூழல் மாசை முடிந்த அளவு கட்டுப்படுத்துவது போன்றவையும் நமது சருமத்தைச் சிறப்பாக வைக்கும்.

நம் உடலின் முக்கியமான, பெரிய உறுப்பு சருமம்தான். அதைக் காப்பது நமது பொறுப்பு!

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN