சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிம்பிளான சமையலறைப் பொருட்கள்

Loading...

Hema Malini

Hema Malini

சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில பொருட்கள் நமது சமையலறையிலேயே உள்ளன. அதைவிட்டு ஏன் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்? கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே செயற்கை முறையில் கெமிக்கல் கலந்த தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டு சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை பாதுகாக்கலாம்.
அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் நாம் பயன்படுத்துபவையே. இங்கு சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அந்த சமையலறைப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைக் கொண்டு கொஞ்சம் உங்கள் சருமத்தை தான் பராமரித்துப் பாருங்களேன்…

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமத்துளைகள் சுருக்கப்படும். மேலும் இதனை அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் இளமையைப் பாதுகாக்கலாம்.

பரங்கிக்காய்

பரங்கிக்காயை அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும்.

தேன்

தேன் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொருளும் கூட. எனவே இதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் உலர வைத்து கழுவுங்கள்.

சந்தனம்

சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்களில் ஒன்று தான் சந்தனம். ஏனெனில் இதில் ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், இது சருமத்தில் உள்ள தழும்புகளை மறைத்து, முகத்தின் அழகை மேலும் அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடும் போது, அதனை சிறிது மசித்து முகத்திற்கும் போடுங்கள். இதனால் முகத்தின் மென்மைத்தன்மை அதிகரிப்பதோடு, கரும்புள்ளிகளும் மறைந்து, முகம் அழகாக ஜொலிக்கும்.

மஞ்சள்

அழகை பாதுகாக்கும் பொருட்களில் மஞ்சள் முதன்மையானது. இதற்கு அதில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தான் காரணம். அதனால் தான் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

பால்

தினமும் பாலைக் கொண்டு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply