சப்போட்டா மில்க்ஷேக்

Loading...

சப்போட்டா மில்க்ஷேக்
தேவையானவை:
பால் – 500 மில்லி, சப்போட்டா (பெரியது) – 3, சர்க்கரை – 5 டீஸ்பூன்.


செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஆறவிடவும். சப்போட்டா பழத்தின் மேல் தோல் மற்றும் உள்ளிருக்கும் விதையை நீக்கி… மிக்ஸியில் போட்டு 2 நிமிடம் ஓடவிடவும். ஒரு கிளாஸ் அளவு ஆறிய பால் விட்டு மூடி மீண்டும் மிக்ஸியை அரை நிமிடம் ஓடவிட்டு நிறுத்தவும். இந்தக் கலவையை, மீதமுள்ள பாலில் விட்டுக் கலக்கினால்… சப்போட்டா மில்க் ஷேக் தயார்.
இதை அப்படியே சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply