சனி கிரகத்தினைப் பற்றி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ருசிகர தகவல் | Tamil Serial Today Org

சனி கிரகத்தினைப் பற்றி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ருசிகர தகவல்

Loading...

சனி கிரகத்தினைப் பற்றி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ருசிகர தகவல்விண்வெளி ஆராய்ச்சிகள் பொதுவாக கிரகங்களை பற்றியதாகவே அதிகளவில் காணப்படுகின்றன.
இவ் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சனி கிரகத்தினை சூழக் காணப்படும் ஒளிவட்டம் மற்றும் அதன் சந்திரன்கள் (துணைக் கிரகங்கள்) டைனோசர்களின் வயதை விடவும் குறைந்தவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமும் சூரியக் குடும்பம் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னரும், அனேகமான கிரகங்கள் பில்லியன் வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் தோற்றம் பெற்றிருக்கலாம் என் கருத்தே நிலவி வந்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே Search for Extra-terrestrial Intelligence Institute (SETI) மேற்கொண்ட ஆய்வில் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே சனி கிரகத்தின் ஒளி வட்டம் மற்றும் துணைக் கோள்கள் தோற்றம் பெற்றன என தெரியவந்துள்ளது.

Loading...
Rates : 0
VTST BN