கோபியன் நிறுவனத்தின் ‘மெர்குரி எம்டேப் ரியோ டேப்லட்’..

Loading...

கோபியன் நிறுவனத்தின் ‘மெர்குரி எம்டேப் ரியோ டேப்லட்’..மெர்குரி எம்டேப் ரியோ என்ற புதிய டேப்லட்டினை கோபியன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. எல்லா நிறுவனங்களும் புதிய புதிய டேப்லட்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

அதன் அடிப்படையில் புதிய டேப்லட்டினை கோபியன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டேப்லட் 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தின் நியூ ஐபேட் டேப்லட் கூட 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டது தான்.

இந்த டேப்லட் டியூவல் கேமரா வசதியினை வழங்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் முகப்பு கேமராவினை பெறலாம்.

8 ஜிபி மற்றும் 16 ஜிபி மெமரி வசதியினை கொண்ட இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

வைபை தொழில் நுட்பம் கொண்ட மெர்குரி எம்டேப் ரியோ டேப்லட் 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் மட்டும் அல்லாமல் இந்த டேப்லட்டின் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை சிறந்த பேட்டரி பேக்கப் வசதியினையும் கொடுக்கும்.

இதன் விலை விவரமும் வெளியாகி உள்ளது. கோபியன் நிறுவனத்தின் இந்த மெர்குரி எம்டேப் ரியோ டேப்லட் ரூ.11,999 விலை கொண்டதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply