கோதுமை ரவைக் கஞ்சி

Loading...

கோதுமை ரவைக் கஞ்சி

தேவையானவை:
கோதுமை ரவை – 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் – 1 கிளாஸ், பச்சைமிளகாய் – 2, நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி – சின்ன கப், தண்ணீர், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.



செய்முறை:
பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும். அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.


பலன்கள்:
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply